மனைவியின் அந்த உறுப்பில் பைக் கைப்பிடியை சொருகியது கணவன்! அதிர வைக்கும் சம்பவம்!

கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது மிகவும் சாதாரண விஷயம். சில ஜோடிகள் சிறிது நேரம் கழித்து சமரசமடைந்து தங்கள் அன்றாட வாழ்க்கையை தொடர்வர். ஆனால் சில சமயங்களில் சண்டைகள் முற்றிப்போய் கைகலப்பு வரை செல்கின்றன.


இதேபோன்று மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணின் கருப்பையில் 6-இன்ச் அளவிற்கு இருந்த பைக் கைபுடியை வெளியே எடுத்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தார் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஒரு பெண் கடந்த 1 வருடமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். தன்னிடம் பணம் இல்லாததால் அந்த பெண்ணால் மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை. பின்னர் வலியை பொறுத்துக் கொள்ள இயலாமல் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தனர். 

ஸ்கேன் ரிப்போர்டை கண்ட மருத்துவர்கள் பெருமதிர்ச்சி அடைந்தனர். அதாவது பெண்னின் கருப்பையில் 6-இன்ச் அளவிற்கு ஒரு பைக் கைபுடி இருந்ததை கண்டறிந்தனர். அதை அகற்ற 1 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறியுள்ளனர். 

அந்த பெண் காவல்நிலையத்தில் சென்று தன் நிலையை விவரித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அவருக்கு திருமணம் நடந்து 16 ஆண்டுகள் ஆனதென்றும், 6 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சண்டையின் போது தன் கணவர் ஒரு பைக் கைபுடியை தன் பிறப்புறுப்பில் அழுத்தி நுழைத்ததாகவும், மேலும் தான் இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

பின்னர் காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபரேஷன் செய்யப்பட்டு, அந்த புடியை டாக்டர்கள் அகற்றினர். பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.