ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் ஆறு நண்பர்கள் சேர்ந்து இருவரை கொடூரமாக தாக்கி அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டு, அடித்து காரினுள் இழுத்துச் சென்று ஆணுறுப்பை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
2 பேரை கடத்தி 'அந்த' உறுப்பில் தீ வைத்து எரித்த கொடூரம்! 6 நண்பர்களின் பதற வைக்கும் செயல்!

பாதிக்கப்பட்ட அவினாஷ் மற்றும் கர்மவீர் எனும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், குற்றவாளிகளில் ஒருவர் சந்திப் நெஹ்ரா என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 5 நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.
குற்றவாளிகள் மீது FIR பதிவு செய்த போலீசார், கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி என கிட்டத்தட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளில் ஒருவன் அங்கு நடந்த சம்பவத்தினை காணொளி மூலம் பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளான். இதனையும் போலீசார் முடக்கியுள்ளனர்.