6 அடி நீள பாம்பு! மிரள வைத்த தேள்! நடுரோட்டில் அரைமணி நேரம் சண்டை! கண்டமங்கலம் மக்கள் செய்த செயல்!

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டு உரிமையாளரை கடிக்க வந்த பாம்புடன் தேள் சண்டை போட்டு விரட்டிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே சின்னபாபு சமுத்திரம் கிராமம் செட்டித்தெருவில் வசித்து வருகிறார். ஜெயமூர்த்தி நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குள் சாரைப் பாம்பு நுழைய முயன்றது. எப்போதும் ஜெயமூர்த்தி வீட்டருகே சுற்றிவரும் கருந்தேள் ஒன்று பாம்பு வீட்டிற்குள் செல்வதை பார்த்த உடன் வேகமாக சென்று பாம்பை கடித்தது.

பின்னர் தேளுக்கும், பாம்புக்கும் சண்டை நடந்தது. சுமார் ½ மணி நேரம் இரண்டும் சண்டையிட்டபடியே இருந்தன. இந்த காட்சியை சிறிது நேரம் வேடிக்கை பார்த்த அப்பகுதி மக்கள் இரண்டிற்கும் நடந்த சண்டையை விலக்கி விட்டனர்.

பாம்பும் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டது. வீட்டு உரிமையாளரை காப்பாற்றிவிட்டோம் என்ற சந்தோஷத்தில் தேளும் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீட்டருகே வசிக்கும் பிராணிகள் எப்போதுமே அந்த உரிமையாளரை தன்னுடைய எஜமானாக கருதி பாதுகாப்பு தரும் என்பதில் ஐயமில்லை.