2 அடி தான் உயரம்! கால்களும் இல்லாத மாற்றுத் திறனாளியை மணந்த 6 அடி உயர அழகிய பெண்! நெகிழ்ச்சி சம்பவம்!

பாகிஸ்தானில் 2 அடி உயரம் கொண்ட குள்ள மனிதனுக்கும் ஆறடி உயரம் கொண்ட அழகான இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


பாகிஸ்தானில் நோர்வே என்னும் இடத்தில் வசித்து வருபவர் புர்ஹான் சிஸ்டிக். சிறுவயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு வளர்ச்சி அடையாமல் தற்பொழுது சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். இந்நிலையில் ஆறடி உயரம் கொண்ட பவுஸியா என்ற அழகான இளம் பெண் சிஸ்டிக்கை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் பாகிஸ்தானின் நோர்வே பகுதியில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் மின்சார சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிஸ்டிக் வருகை தந்தது அங்கு இருந்தவர்களை மனம் நெகிழச் செய்தது. மேலும் இவர்களது திருமண விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதையடுத்து இவர்களது திருமணம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன. மேலும் திருமணம் குறித்து சிஸ்டிக் மனைவி பவுஸியாவிடம் கேட்டறிந்த பொழுது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் நான் சிஸ்டிக்கை மிகவும் மனம் விரும்பி தான் திருமணம் செய்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

அவரும் என் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்று தெரிவித்துள்ளார்.