அந்த எம்பிய பன்னி சுடுற மாதிரி சுடுங்க! அமைச்சர் டென்சன்! வைரல் வீடியோ!

நாங்குநேரி எம்எல்ஏவை பார்த்தால் பன்றியை சுடுவது போல சுட்டுவிடும் 6 அதிமுக எம்எல்ஏ மேடையில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


அதிமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரசு கட்சியின் எம்எல்ஏவை காணவில்லை. அவனைக் கண்டால் பன்னிய சுடுற மாதிரி சுடுங்க..

டெல்லியில் அமர்ந்துகொண்டு இங்கு ஏமாற்று வேலை செய்கிறான். குடும்பத்துடன் அங்கேயே இருந்து கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறான். இவனுக்கு திமுக முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. மக்களை திட்டமிட்டு திமுக ஏமாற்றுகிறது என்றார்.

இப்படி மற்றொரு எம்எல்ஏ-வை ஒருமையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் எம்எல்ஏ வாக இருந்ததும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பியாக வசந்தகுமார் தேர்வு செய்யப்பட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.