ஒரு வருடமாக 5ம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று..! ஆசிரியர் செய்த கேவலம்!

5-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருக்கோவிலூர் எனும் பகுதியில் ஆதித்திருவரங்கம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ரங்கராஜ் என்பவர் 5-ஆம் வகுப்பிற்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ரங்கராஜ் தன் வகுப்பில் பயிலும் மாணவிக்கு ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். ஓராண்டிற்குப் பிறகு இந்த சம்பவம் குறித்த தகவலானது ஆதாரத்துடன் பள்ளி தலைமையாசிரியரிடம் சென்றுள்ளது. 

ஆதாரங்களை சரிபார்த்த பள்ளி தலைமையாசிரியர் சிறுமியின் பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் ஆதித்திருவரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரங்கராஜை சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆன போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது ஆதித்திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.