ஓடும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவி! பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ஓடும் ஆட்டோவில் இருந்து சிறுமி ஒருவர் கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குஜராத் மாநிலத்தில் கபோதரா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்க ஆர்.பி.தாமி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ரியா மக்காவானா என்ற சிறுமி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் வழக்கமுடையவர். திங்கட்கிழமை அன்று பள்ளியிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

தன் சக தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக வளைவில் ஆட்டோ திரும்பிய போது சிறுமி ஆட்டோவிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட சிறுமி ஆட்டோவை நோக்கி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிறுமிக்கு எந்தவித பெரிய காயங்களும் ஏற்படாதபோதிலும், வளைவுகளில் வாகனத்தை வேகமாக ஓடிய காரணத்திற்காக ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையினரும், பள்ளிக்கல்வித்துறையும் தனித்தனியே விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவமானது குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.