19 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய 59 வயது தாத்தா..! கேட்போரை மிரள வைத்த சம்பவம்!

19 வயது இளம்பெண் 59 வயது கோடீஸ்வரரை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாகியிருக்கும் சம்பவமானது நைஜீரியாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் நெட் வோக்கோ. இவருடைய வயது 59. இவர் அந்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர். இவருடைய சொத்து மதிப்பானது 1.2 பில்லியன் டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இவர் 19 வயது நடிகையான ரெஜினா டேனியல்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் இடையே 40 வயது வித்தியாசம் இருந்ததால் இந்த திருமணத்தை பலதரப்பட்ட மக்கள் விமர்சித்திருந்தனர். இருப்பினும் இருவரும் நன்றாகவே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனிடையே ரெஜினா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை இருவரும் சேர்ந்தே வெளியிட்டுள்ளனர்.

ரெஜினா கர்ப்பமான மகிழ்ச்சியில் நெட், அவருக்கு  லண்டனில் உள்ள ஆடம்பரமான வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் ரெஜினா அங்கு வசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தன்னுடைய கணவர் தனக்கு பரிசளித்துள்ளதை நினைத்து ரெஜினா ஆச்சரியம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்முறையாக தான் ஏன் தன்னை விட 40 வயது அதிகமான முதியவரை திருமணம் செய்து கொண்டேன் என்று ரெஜினா கூறியுள்ளார். அதாவது "நான் என்னுடைய வயது நபரை திருமணம் செய்துகொண்டு இருப்பேன் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. நான் மிகவும் பிடிவாதமானவள். என்னுடைய கணவரிடம் மட்டும் என் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வேன். அவரை நான் பெரிதளவில் மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது நைஜீரியா நாட்டில் வைரலாகி வருகிறது.