தேனியில் உழவர் சந்தையில் பணிபுரிந்த மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
57 வயது பாட்டியுடன் கதற கதற செக்ஸ் வல்லுறவு! தேனியில் அதிர்ச்சி சம்பவம்!

தேனியில் ஓடைத்தெரு என்னும் பகுதியில் உழவர் சந்தையில் 57 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு ஒரு மர்ம கும்பல் அவரது வாயை கட்டி, துணியால் அடைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அவர் முகத்தில் பசையை பூசி கொலை செய்துள்ளனர். சடலத்தை உழவர் சந்தையின் உள்ளே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இன்று காலையில், உழவர் சந்தையை திறந்து பார்த்தபோது மூதாட்டி இறந்தவாறு கிடந்துள்ளார். பதறிய பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சடலத்தை தேனியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குற்றவாளிகள் விட்டு சென்ற தடயங்களை கொண்டு காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.