56 வயதில் இப்படியா? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் சிக்கலில் சிக்கிய ராதிகா!

இயக்குனர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிகராக அறிமுகமாகிறார்.மேலும் வட சென்னை பெண் ரவுடி கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும், காவ்யா தாப்பர், நிகிஷா படேல், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.


இந்நிலையில் ,இந்தப் படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், ராதிகா சரத்குமார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்ததற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில், ராதிகா புகைபிடிக்கும் காட்சிகள் மக்கள் நல்வாழ்வு துறை வகுத்துள்ள விதிகளுக்கு மாறாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து தளங்களில் இருந்தும் இந்த விளம்பரங்களை நீக்கக்கோரி உள்ள மக்கள் நல்வாழ்வு துறை, ஏழு நாட்களுக்குள் ராதிகா சரத்குமார் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.