75 அடி நீளம்! 56 டன் எடை! பிரமாண்ட பாலத்தை களவாடிய பலே கொள்ளையர்கள்!

ரஷ்யாவில் சுமார் 56 டன் எடையை கொண்ட உலோக பாலம் சிறிது உடைந்து ஆற்றில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மொத்த பாலம் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உம்பா ஆற்றின் மீது கட்டபட்டிருந்த , பிரித்து மறுபடியும் சேர்த்துவைக்க கூடிய வகையில் வடிவமைக்கபட்ட உலோக பாலம் அமைக்கபட்டிருந்தது.

சுமார் 75 அடி நீளமுள்ள இந்த பாலம் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி, அந்நாட்டின் பத்திரிக்கைகளில் அந்த பாலத்தின் ஆற்றில் சிறிதளவு விழுந்து கிடந்ததாக செய்திகள் வெளியானது .

இந்த நிலையில் சில நாட்களில் பாலம் காணாமல் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் உலோகங்களை திருடும் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.