தொடர் இருமல்..! சளியுடன் வந்த ரத்தம்! மூதாட்டி மூக்கிற்குள் இருந்த மர்ம பொருள்! கண்டுபிடித்து அதிர்ந்த டாக்டர்கள்!

புதுக்கோட்டையில் 55 வயது பெண் மணியின் நுரையீரலில் மூக்குத்தி திருகாணி சென்று சிக்கி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதுகோட்டை மாவட்டம், கறம்பகுடி விடுதியில் வசித்து வருபவர்கள் வீரப்பன் அவரது மனைவி புஷ்பம் வயது 55 ஆகிறது. புஷ்பம் கடந்த 1 மாதத்திற்கு மேலாக வறட்டு இருமலினால் அவதிக்குள்ளாகியுள்ளார், இந்த நிலையில் மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. 

தொடர்ந்து இருமல் அதிகமாக இருந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக கூடவே ரத்தமும் கசிந்தது, இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பத்திற்க்கு,  மருத்துவர்கள் லேப்ரோ ஸ்கோபி மூலமாக பரிசோதனை செய்த போது தான் அவரது நுரையீரல் இடையில் அவர் அணிந்து இருந்த, தங்க மூக்குத்திக்கான திருகாணி கழன்று அவரது சுவாச குழாக்குள்ளாக என்று அடைத்துக்கொண்டு இருந்துள்ளது.

இதனால் தான் அவர் தொடர்ந்து இருமல மற்றும் ரத்த கசிவினால் பாதிப்படைந்துள்ளார் என அறிந்த மருத்துவர்கள், உடனடியாக லேப்ரா ஸ்கோப்பி யில் இடுக்கி போல அமைத்து அவரது நுரையீரலில் இருந்த திருகாணியை லாவகமாக அகற்றினார். எந்த வித அறுவை சிகிச்சையும் இல்லாமல் திருகாணியை நீக்கிய மருத்துவ குழுவிற்க்கு பலரும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.