அமராவதி: 55 வயதான பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
55 வயது விதவை..! 3 ஆண்கள்! ஒருவர் மாறி மற்றொருவர்..! கேட்போரை பதைபதைக்க வைத்த சம்பவம்!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள போலவரம் கிராமத்தில் 55 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, அப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.
இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தியதில், தனியாக இருந்த பெண்ணை, உள்ளூர் நபர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, விசயம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக, அப்பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு, தப்பிடியோடியதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்த போலீசார், எஞ்சிய காமக் கொடூரன்களையும் தேடிவருகின்றனர்.
ஆந்திரா, தெலுங்கானாவில் அண்மைக்காலமாக பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடைபெற தொடங்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.