55 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம்! வெறி பிடித்த கணவன் செய்த கொடூர செயல்!

சேலத்தில் 55 வயதில் மனைவியின் நடத்தையில் கொண்ட சந்தேகத்தால் மூளை சிதறும் அளவுக்கு மனைவியின் தலையில் அடித்துக்கொன்ற கணவன் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தானும் தற்கொலை செய்துகொண்டார்.


சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்தவர் காளியப்பன் வயது ஒன்றும் அதிகமில்லை 55 வயது இளைஞர்தான். இவரது மனைவி சாந்தாவும் 50 வயது இளம்பெண். இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது மகள் இந்திராணிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

 

இந் நிலையில், கட்டிடத் தொழிலாளியான மகன் முருகனுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றதுமுருகன் தனது மனைவியுடன் பெற்றோர் வசித்த வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வருகிறார்.

 

காளியப்பனுக்கு சொந்த ஊரான சங்ககிரியை அடுத்த ஆவாரம்பாளையத்திலும் இரண்டு சொந்த வீடுகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார்சில ஆண்டுகள் வேலைக்குச் செல்லாமல் இருந்த சாந்தா, கடந்த சில வாரங்களாக மீண்டும் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால் அப்போது முதலே காளியப்பனை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டுவிக்கத் தொடங்கிவிட்டது. மனைவியை வேலைக்குச் செல்ல வேண்டாம் என அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது

 

நேற்று சாந்தா வழக்கம் போல் வேலைக்கு சென்று திரும்பிய நிலையில் இரவு குடிபோதையில் வந்த காளியப்பன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் மகனும் மருமகளும் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறதுஅப்போது அடங்கிவிட்டாலும் கொலைவெறிப் பூதம் நள்ளிரவில் விஸ்வரூபம் எடுத்தது.

 

அமைதியின்மையும் ஆத்திரமும் உறக்கத்தைக் கெடுக்க நடு இரவில் எல்லை மீறிய ஆத்திரத்தில் படுக்கையை விட்டு எழுந்த காளியப்பன் முன்னெச்சரிக்கையாக மகனும் மருமகளும் உறங்கிக் கொண்டிருந்த அறைக் கதவை வெளிப் பக்கமாக பூட்டினார்

 

பின்னர் சம்மட்டியை எடுத்த காளியப்பன் உழைத்த களைப்பில் உறங்கிக் கிடந்த மனைவியின் தலையில் வெறித்தனமாக மீண்டும் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மூளை சிதறி சாந்தா அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

 

மூளை செயலிழந்த நிலையில் சாந்தாவால் கூச்சலிடக்கூட முடியாததால் சுற்றுவட்டாரத்தில் எவருக்குமே கொலை குறித்து எதுவும் தெரியவில்லைஅதிகாலையில் முருகன் உறங்கி எழுந்தபோது அறைக் கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்தார்.

 

அப்போது தனது தந்தை அங்கு இல்லாததையும், தாய் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதையும் கண்டு கதறியழுதார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவான காளியப்பனை தேடி வந்தனர்

 

இந்நிலையில் சங்ககிரியைச் சேர்ந்த உறவினர் ஒருவர் முருகனை தொலைபேசியில் தொடர்புகொண்டார். காளியப்பன் தற்கொலை செய்துகொண்டதாக அவர் தெரிவித்தார். மனைவியை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் காளியப்பன் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.