பிறந்த குழந்தையின் முகத்தில் பிரமாண்ட நீர் கட்டி! பல வருட போராட்டத்திற்கு பிறகு நிகழ்ந்த அதிசயம்! நெகிழும் பெற்றோர்!

நியூயார்க்: கழுத்து, கன்னங்களில் ஏற்பட்ட கட்டி காரணமாக, சிறுமி ஒருவர் 55 முறை அறுவை சிகிச்சை செய்யும் அவலத்திற்கு ஆளாகியுள்ளார்.


அமெரிக்காவின் மிஸ்ஸிஸிபி பகுதியை சேர்ந்தவர் டனாவே. தற்போது 18 வயதாகும் இவர் பிறந்த முதலாகவே ஒருவித விநோத உடல் பாதிப்பை கொண்டிருந்தார். ஆம், டனாவே, கன்னங்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் ஒருவித சதைக் கட்டி வளர்ந்திருந்ததால், முகம் வீங்கி, பார்ப்பதற்கே விநோத உருவத்துடன் இருந்தார். இதனால், சிறு வயது முதலாகவே, அவரது பெற்றோர், அவரை பல விதமான அறுவை சிகிச்சைகளுக்கு உள்படுத்தினர்.  

இதுவரையிலும் மொத்தம் 55 அறுவை சிகிச்சைகளை டனாவே சந்தித்துள்ளார். தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அவர் மருத்துவமனையில்தான் செலவிட்டுள்ளார். எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பிறகும், அவரது முகம் மற்றும் கழுத்தில் உள்ள சதை வளர்ச்சியின் அளவு முற்றிலுமாக குறையவில்லை. ஓரளவுதான் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தனது வித்தியாசமான முக தோற்றம் பற்றி நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கேலி, கிண்டல் செய்வதால், படிப்பைக் கூட சரிவர தொடர முடியவில்லை என்று வேதனை தெரிவிக்கும் டனாவே, விரைவிலேயே இயல்பான முக தோற்றத்தை பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

இத்தகைய உடல் பாதிப்பு, ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடியதாகும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, குழந்தை பிறக்கும்போதே இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு விடுவது குறிப்பிடத்தக்கது.