வலியால் துடித்த பசுமாடு..! வயிற்றுக்குள் 54கிலோ பிளாஸ்டிக்! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்!

சென்னையில் பசுவின் வயிற்றிலிருந்த சுமார் 52 கிலோ பிளாஸ்டிக்கை ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு தமிழக கால்நடை பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகற்றி உள்ளனர்.


சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர்கள் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஒரு பசுமாட்டின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் ஊசிகள் போன்ற பொருட்களை நீக்கினர்.  

சென்னையின் புறநகர பகுதியான திருமுல்லைவாயலில் வசிக்கும் பி.முனிரத்தம் என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலூரிலிருந்து பசுவை வாங்கியிருந்தார். பின்னர் சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்த பசு கன்று குட்டி போட்டுள்ளது, பிறகு பசு மூன்று லிட்டர் பாலையும் கறக்கும். இந்த நிலையில், திடீர் என்று ஒரு நாள் பசு மாடு மலம் கழிக்க முடியவில்லை மற்றும் சிறுநீர் கழிக்கயும் போராடியது.

போராடுவதைக் கண்ட திரு. முனிரத்தம் தனது பசுவை உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார், அவர் அதை (TANUVAS) தனுவாஸ் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் பசுமாட்டை வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பிறகு பசுமாட்டை சோதனை செய்த போது, அந்த மாடு ஏராளமான பிளாஸ்டிக கழிவுகளை உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிளாஸ்டிக்கை உண்டதால் பசு மாட்டிற்கு கடுமையான வலியை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பசு மாடு அடிக்கடி அதன் கால்களால் உதைக்கொண்டு என்றும், இந்த காரணமாக மாட்டினால் பாலின் அளவும் குறைந்ததுள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், மருத்துவர்களின் மலக்குடல் பரிசோதனையின் போது கூட பிளாஸ்டிக் இருப்பதை கண்டுபிடித்துள்ளன்ர். மேலும், பசு மாடு இரண்டு வருடமாக பிளாஸ்டிக்கை உட்கொண்டுள்ளது என்று கால்நடை மருத்துவ மருத்துவ பேராசிரியர் பி. செல்வராஜ் விளக்கினார். அதில் எக்ஸ்ரே நடத்தி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பார்த்ததில், பசுவின் வயிற்றின் நான்கு அறைகளில் ஒன்றான பிளாஸ்டிக் 75% ஆக்கிரமித்திருப்பதைக் கண்டறிந்தோம் என்று கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிந்தது. இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை. வயிற்றின் சுவர்களில் கழிவுகள் இணைக்கப்பட்டிருந்ததால், மாட்டிற்கு எவ்வித பாதிப்புயின்றி இருக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது, என்று அறுவை சிகிச்சை உதவி பேராசிரியர் ஏ.வேலவன் கூறினார். 

 மற்றொரு அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.சிவசங்கருடன் அறுவை சிகிச்சை செய்தார். பிளாஸ்டிக் அகற்றுவதில் முதுகலை மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. பிளாஸ்டிக் மத்தியில் ஒரு சில ஊசிகளும் காணப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் ஊசி விலங்கு இதயத்திற்கு நகரும் என்பதால் அது ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும் என்று டாக்டர் வேலவன் கூறினார்.