டிக்கெட் ரத்து மூலம் ரூ.5300 கோடி! பயணிகளிடம் ரயில்வேதுறை வழிப்பறி!

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு ரத்து செய்யும் போது அதில் அபராதத் தொகையை பிடித்தம் செய்யும் முறை கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதனால், ரயில் பயணிகளுக்கு கடுமையான பண நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.


ஊருக்குப் போக டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, திடிரென ஏதோ ஒரு காரணத்தால் அந்த டிக்கெட்டை ரத்து செய்யும் போத கால நேரத்துக்கு ஏற்ப ஒரு கட்டணத்தை ரயில்வே வசூலித்துக் கொள்கிறது. அந்த வகையில், 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை வெறும் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படும் போது பிடித்தம் செய்யும் தொகையால் ரயில்வே நிர்வாகத்துக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?ரூ.5,366.53 கோடியாகும்.

2017 - 18ம் நிதியாண்டில் இப்படிக் கிடைத்த வருவாய் ரூ.1,205.96 கோடியாக இருந்த நிலையில், 2018 - 19ம் நிதியாண்டில் ரூ.1,852.50 ஆக உயர்ந்துள்ளது. ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது ஒரு டிக்கெட்டுக்கு ரூ.60ஐ ரயில்வே பிடித்தம் செய்கிறது. இதுவே ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு டிக்கெட்டை ரத்து செய்யும் போது ரூ.240 பிடித்தம் செய்யப்படும். இது நிச்சயம் ஒரு பெரிய தொகைதான்.