மாமா வேலை பார்த்த ட்யூசன் ஆசிரியை! 10 வயது மாணவியை தொழில் அதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம்!

ஹரியானா மாநிலம் குர்கானில் தன்னை நம்பிப் படிக்க வந்த 10 சிறுமியை தொழிலதிபர் ஒருவருக்கு டியூஷன் ஆசிரியை பலியாக்க அந்த 53 வயது நபர் சிறுமியை 4 முறை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியையின் சமூக வலை தளப் பக்கத்தில் நுழைந்து பார்த்த போது அதில் அந்த ஆசிரியைக்கும், தொழிலதிபருக்கும் நடந்த சாட்டிங்கை பார்க்க நேர்ந்த போது அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அவருக்குத் தெரிய வந்தது. 

அவர் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் நலன் தொடர்பான தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தனது நண்பருக்கு அனுப்பினார். உடனடியாக டெல்லி போலீசாரைத் தொடர்பு கொண்ட அந்த நண்பர் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது அந்த தொழிலதிபர் அந்த ஆசிரியையிடம் தனக்கு 10 வயதுச் சிறுமி வேண்டும் எனக் கேட்டதும் அதற்கு அந்த கேடுகெட்ட ஆசிரியை தன்னிடம் டியூஷன் படித்த 10 வயதுச் சிறுமியை அவனுக்கு பலியாக்க ஒப்புக்கொண்டதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போலீசார் உரிய முறையில் தைரியம் கொடுத்தும் கவுன்சிலிங் செய்தும் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்தததை விவரித்தார். கடந்த மாதம் அந்த ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என 4 முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மூன்று முறை ஆசிரியை வீட்டிலும் ஒரு முறை குற்றவாளியின் காரிலும் தான் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாகத் தெரிவித்தார். 

அதன் பேரில் குற்றவாளியை கடந்த வியாழக்கிழமை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.