51 வயது நடிகையிடம் ஆபாச அத்துமீறல்! இயக்குனர் அட்லி மீது திடுக் புகார்!

நடிகர் விஜய்யின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து தன்னிடம் இயக்குனர் அட்லி அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.


தளபதி 63 என்று குறிப்பிடப்படும் நடிகர் விஜயின் அடுத்த திரைப்படம் சென்னை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை நடிகர் விஜய்யை வைத்து மெர்சல் தெறி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் 51 வயதான கிருஷ்ண தேவி எனும் நடிகையும் நடித்து வருகிறார். இவர் இன்று காலை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு திடீரென வருகை தந்தார். அத்துடன் இயக்குனர் அட்லி மீதும் அவரது உதவியாளர்கள் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாராக கொடுத்துள்ளார் கிருஷ்ண தேவி.

படப்பிடிப்பு தளத்தில் வைத்து இயக்குனர் அட்லிக்கும் அவரது உதவியாளர்களும் தன்னை ஆபாசமாக பேசியதாகவும் தன்னை வேலை செய்ய விடாமல் அங்கிருந்து விரட்டி அடித்து விட்டதாகவும் கிருஷ்ண தேவி அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். தன்னை ஆபாசமாக பேசிய மற்றும் பணி செய்ய விடாமல் தடுத்த இயக்குனர் அட்லி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ண தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் அடிப்படையில் பெண்ணின் மாண்பை சீர்குலைத்தல் எனும் சட்டப்பிரிவின் அடிப்படையில் இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.