கொரோனா குணமாகி மகிழ்ச்சியாக வீடு திரும்பிய 51 பேர்..! ஆனால் அவர்களை மீண்டும் தாக்கிய கொரோனா வைரஸ்..! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

நோய் அறிகுறிகளில்லை என்று கூறப்பட்ட 51 பேருக்கு மீண்டும் கொரோனா வந்திருக்கும் சம்பவமானது தென்கொரியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 73,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதல் குறைவாகவுள்ள நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. அந்நாட்டிலேயே சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்த நகரங்களில் ஒன்று "டேகு". இங்கு 51 பேருக்கு நோய் தாக்குதல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று  முதன்முதலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பரிசோதனையில் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வில்லை என்று வெளிவந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள செய்தியானது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்து டேகு நகரத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது.

அந்நாட்டு நிபுணர்கள் கூறுகையில், "மனித உயிரணுக்களுக்குள் இந்த வைரஸ் மறைந்திருக்கலாம் என்றும், அதன் பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் வெளியே வந்திருக்க கூடும்" என்று கூறியுள்ளனர். வேறு சில நிபுணர்கள் கூறுகையில், "வைரஸ் தாக்குதலை கண்டறிவதற்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஏதேனும் பிழை இருந்திருக்கக்கூடும். அதனால்தான்  51 பேர் குணம் அடைந்ததாக வெளியா பரிசோதனை முடிவில் தவறுகள் ஏற்பட்டிருக்கக்கூடும். இதுபோன்ற சோதனை முறையில் 20-லிருந்து 30 சதவீதம் வரை பிழை இருக்கக்கூடும்" என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.