கையை பிடித்து.. பிறகு தொடக் கூடாத இடங்களில் தொட்டு..! 50 வயது முதியவரால் இளம் கல்லூரி மாணவிக்கு நடு ரோட்டில் நேர்ந்த விபரீதம்!

புனே: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த 50 வயது நபர் கைது செய்யப்பட்டார்.


புனேவில் உள்ள தேஹூ சாலை பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண், அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு, அண்டை வீட்டில் வசிக்கும் 50 வயது நபர் கல்லூரி செல்லும் வேளையில் திடீரென வழிமறித்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிப்பிட்ட நபருக்கும், அந்த மாணவியின் வீட்டினருக்கும் இடையே நில பிரச்னை இருந்துள்ளது. இதன்பேரில், பழிவாங்கும் நோக்கில் அவர் இச்செயலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.  

இதன்பேரில், பாதிக்கப்பட்ட மாணவி தற்போது பெற்றோர் உதவியுடன் போலீசில் புகா செய்தார். இதையேற்று, வழக்குப் பதிந்த போலீசார், அந்த 50 வயது நபரை கைது செய்தனர்.