வெற்றிகரமான 50வது நாள்! திகார் சிதம்பரத்துக்கு போஸ்டர் இல்லையா?

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தன் மீது குற்றம் சாட்டுவதற்கான முகாந்திரமே இல்லை என்பதுதான் முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் வாதம்.


ஆனால், அதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் திகாரில் அடைத்துவிட்டது நீதிமன்றம்.எப்படியும் 15 நாட்களில் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், 50வது நாளை தொட்டுவிட்ட பிறகும் சிதம்பரம் வெளியே வருவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

சிறையில் இருந்து வெளியே வந்தால் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவார் என்றும், சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்றும் சி.பி.ஐ. கூறுவதைக் கேட்டுத்தான் அவருக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்.

ஏற்கெனவே அமித்ஷாவை 90 நாட்களுக்கும் மேல் சிறையில் வைத்தவர் சிதம்பரம் என்பதால், 100 நாட்களைக் கடந்தால்தான் விடுதலை செய்யப்படுவார் என்று பா.ஜ.க. சார்பில் சொல்லப்பட்டு வந்தது. அப்படித்தான் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது.