எங்கு நோக்கினும் இரட்டையர்கள்! ஒரே பள்ளியில் 50 ஜோடி டிவின்ஸ்! காண்போரை மலைக்க வைக்கும் ஸ்கூல்!

சீர்காழியில் இயங்கி வரும் தனியார் பள்ளியொன்றில் 50-க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் படித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்தில் சீர்காழி எனும் இடம் அமைந்துள்ளது. சீர்காழியில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 5000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் வினோதமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. அதாவது ஜோடி ஜோடியாக 50-க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் ஒன்றாக படித்து வருகின்றனர். சில இரட்டையர்கள் ஒரே இருக்கையில் அமர்ந்து படிப்பதனால் ஆசிரியர்கள் கடுமையான குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இங்கு நிறைய கலாட்டாக்களும் வினோதமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு படிக்கும் பிரியங்கா-பரீத்தியங்கா என்ற இரட்டையர் ஜோடி சென்ற ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் தலா 373 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகள் அப்பள்ளியில் அரங்கேறி வருகிறது. இதனை பள்ளி நிர்வாகத்தினர் குழப்பத்துடனும், சுவாரஸ்யத்துடனும் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது.