உடும்பு வேட்டையாடி சமைத்து தின்று பேஸ்புக்கில் போட்டோ ரிலீஸ்..! 5 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்! அதிர்ச்சி காரணம்!

உடும்பை வேட்டையாடி சாப்பிட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து 5பேர் கைது செய்யப்பட்டுள்ளது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாகவே சேலம் மாவட்டத்தில் உள்ள சில வாட்ஸ்அப் குழுக்களில் இளைஞர்கள் உடும்பு சமைத்து சாப்பிட்டது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சட்டப்படி உடும்பை அடித்து சமைத்து சாப்பிடுவது தண்டனைக்குறியதாகும்.

காவல்துறையினர் அந்த புகைப்படங்களை வைத்து இளைஞர்களின் அடையாளங்களை தேட தொடங்கினர். அவ்வாறு தேடியதில் சேலம் மாவட்டத்திலுள்ள நீர்முள்ளிகுட்டை என்னும் பகுதிக்கு உட்பட்ட மணி, யுவராஜ் மற்றும் 3 இளைஞர்கள் என்று காவல்துறையினர் கண்டறிந்தனர்.

உடனடியாக அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த உடும்பின் கால், தோல், இறைச்சி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.