சாய் பாபா ஆசிர்வதிக்கிறார்..! பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் நுழைந்த 4 இளைஞர்கள்! பிறகு அரங்கேறிய திடுக் திக் சம்பவம்!

சாய்பாபாவின் பெயரை சொல்லி 5 இளைஞர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் பழையூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் 5 இளைஞர்கள் சாய்பாபா உருவசிலை வைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பொதுமக்களுக்கு விபூதி, குங்குமம் ஆகியவற்றை வழங்கினர். பொதுமக்கள் உண்டியலில் காணிக்கையை செலுத்தினர். 

அப்போது ஒரு மூதாட்டி காணிக்கை செலுத்திவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இளைஞன் ஒருவன் மூதாட்டியை பின்தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இளைஞனிடம் விசாரித்தபோது, சாய்பாபா உங்களின் வீட்டில் பிரார்த்தனை செய்ய கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

சுதாரித்துக்கொண்ட மூதாட்டி இளைஞனை கீழே தள்ளிவிட்டு அவனை துரத்தினார். இளைஞன் மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியே ஓடி வருவதை பார்த்த 4 பேரும் பிற வீடுகளில் இருந்து ஓடி வந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் அவர்களை அப்பகுதி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணை நடத்தியதில், 5 இளைஞர்களும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெண்கள் தனியாக இருக்கும் வீட்டில் சென்று அவர்களை திசைதிருப்பி நகை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மூதாட்டியின் வீட்டிற்கு எடுத்து சென்ற நீரில் மயக்க மருந்து கலந்திருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவமானது பழையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.