திருமணமாகி 5 வருடம்! குழந்தை பாக்கியம் இல்லை! கண்டு கொள்ளாத கணவன்! காதல் மனைவி எடுத்த பகீர் முடிவு!

திருப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசித்து வரும் ராஜா என்பவரும் சங்கீதா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அருகில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் ராஜா, நேற்றைய தினம் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் தனியாக இருந்த சங்கீதா விஷம் அருந்தி மயங்கி கிடைந்துள்ளார். 

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். கோவையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த பெண் விஷமருந்தி உயிரிழப்பதற்கு பின்னணி என்னவாக இருக்கும்? என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இப்படி ஒரு முடிவை சங்கீதா எடுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.