நடனப்பள்ளியில் சிறுமியுடன் பாலியல் வல்லுறவு! கண்டுபிடித்த தாய் மாஸ்டருக்கு கொடுத்த தரமான தண்டனை!

திருச்சியில் நடனப்பள்ளிக்கு வந்த 5 வயதுச் சிறுமியிடம் செல்போனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் பலாத்காரம் செய்தவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தம்பதியின் மகளான 5 வயதுச் சிறுமிக்கு நடனத்தில் ஆர்வம் என்பதால் அருகில் உள்ள நடனப்பள்ளியில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை நடனம் கற்றுக்கொண்டார். சிறுமியை அவரது தாய் தினமும் நடன வகுப்பில் கொண்டுபோய் விடுவதும் வகுப்பு முடிந்ததும் மீண்டும் வந்து அழைத்துச் செல்வதும் வழக்கம் 

அதே நடன வகுப்பில் சரவணக்குமார் என்ற 19 வயது நபரும் நடனம் கற்று வந்தான். சில நேரங்களில் சிறுவர் சிறுமியர்களுக்கு சரவணக்குமாரே நடனம் கற்றுக்கொடுத்தானாம். அப்போது அவன் செய்த பாலியல் சீண்டல்கள் விவரம் புரியாத சிறுமிகளுக்கு விளங்கவில்லை போலும். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 5 வயதுச் சிறுமியை வழக்கம் போல நடனப்பள்ளிக்கு அழைத்துக் கொண்டு வந்த தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அன்றைய தினம் சரவணக்குமார்தான் நடனம் கற்றுக்கொடுததாக கூறப்படுகிறது. வகுப்பு முடிந்ததும் மற்ற மாணவிகள் சென்று விட்ட நிலையில் 5 வயதுச் சிறுமி மட்டும் தனியாக தனது தாயக்காக காத்துகொண்டிருந்தார். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சரவணக்குமார் சிறுமிக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டியதாகக் கூறப்படுகிறது. 

தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் தொடங்கி அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நாய், இறுதியில் பாலியல் பலாத்காரமே செய்துவிட்டான். இந்நிலையில் அங்குவந்த தாய சோர்வடைந்த நிலையில் இருந்த சிறுமியைப் பார்த்து பதறிப் போனார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்ததைக் கூறி அழுததையடுத்து அக்கம்பக்கத்தினருடன் நடனப்பள்ளிக்கு சென்ற தாய் சரவணகுமாரை அடித்து உதைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

சரவணக்குமாரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.