குழந்தையின் கைவிரலை துண்டாக நறுக்கிய நர்ஸ்! அதிர வைக்கும் காரணம்!

குஜராத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது குழந்தையின் கட்டைவிரலை அங்குள்ள செவிலியர் ஒருவர் தவறுதலாக துண்டித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.


குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 5 வயது குழந்தை ஒன்று நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக  பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் குழந்தைக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் கட்டு போடப்பட்டிருந்தது.

குழந்தையின் உடல்  நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அந்தக் கட்டை பிடிப்பதற்காக  செவிலியர் ஒருவர் கத்தரிக்கோல் மூலம் அதை வெட்டியுள்ளார், இந்நிலையில்  கத்தரிக்கோல் குழந்தையின் கட்டைவிரலில் படவே விரல் துண்டானது  இந்நிலையில் அதிர்ந்த அப்பெண் உடனே அருகில் உள்ளவர்களை அழைத்து இது  பற்றி கூறினார்.

உடனே அங்கு வந்த தலைமை மருத்துவர் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் கட்டைவிரலை சேர்த்து விடுவதாக தெரிவித்தார். இந்த தகவலை கேட்ட குழந்தையின் பெற்றோர்கள்  மிகவும் அதிர்ச்சி அடைந்தனர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர்.

இதையடுத்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில் தலைமை மருத்துவர் இந்த அறுவை சிகிச்சை பயனளிக்கும் என தெரியவில்லை?  எனவே நீங்கள் வேறொரு நவீன மருத்துவமனைக்குத் உங்கள் குழந்தையை  அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர்கள் உடனே அருகில் உள்ள காவல்  நிலையத்தில், மருத்துவமனை மீது புகார் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தவறுதலாக குழந்தையின் கட்டை விரலை  வெட்டிய செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இதையடுத்து குழந்தை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.