இரும்பு ஆணியை விளையாட்டாக விழுங்கிய சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
சிறுவன் வயிற்றுக்குள் சிக்கிய விபரீத பொருள்! டாக்டர்களே அதிர்ந்த சம்பவம்!

ஓசூர் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம். கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் விஸ்வநாத் (வயது 5), வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து வாயில் போட்டு, விழுங்கிவிட்டான்.
இந்த ஆணி சிறுவனின் வயிறுக்குள் சிக்கிக் கொண்டதால், அவன் வலியில் துடித்துள்ளான். உடனடியாக, சிறுவனின் பெற்றோர் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். போராடி பார்த்த மருத்துவர்கள், உடனடியாக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதன்பேரில், சிறுவன் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தற்போது சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணி எக்குத்தப்பாக சிக்கியுள்ளதால் மருத்துவர்களே எப்படி எடுப்பது என தெரியாமல் அதிர்ந்து போயுள்ளனர்.