அம்மா இன்னும் வரலியா? 6 மாதங்களாக ஏக்கத்துடன் காத்திருக்கும் 5 வயது சிறுவன்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

தஞ்சாவூரில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் கரூரில் அனாதையாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நான்கு குழந்தைகளை மீட்டு அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த குழந்தைகள் நல தொண்டு நிறுவனம் அக்குழந்தைகளை பராமரித்து வந்தது.


இந்நிலையில் மூன்று குழந்தைகளின் பெற்றோர்கள் வந்து அவர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்ற நிலையில் தருண் என்பவரின் பெற்றோர்கள் மட்டும் வரவில்லை மற்றும் அவர்கள் யார் என்பது குறித்தும் குழந்தைகள் நல காப்பக நிர்வாகிகள் தேடி வருகின்றனர். இந்நிலையில் அக்குழந்தை பெற்றோருக்காக ஏங்கித் தவிக்கிறது என்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் திலகவதி தெரிவித்துள்ளார்.

கரூர் பேருந்து நிலையத்தில் பரமேஸ்வரி  வயதான பெண்மணி நான்கு குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் இந்நிலையில் அவர்கள் அனைவரையும் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது பரமேஸ்வரி மட்டும் குழந்தைகளுடன் இல்லாமல் தப்பிச் சென்றுவிட்டார்.

அக்குழந்தைகளிடம் கேட்டபோது அவர்கள் தங்கள் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூர் குழந்தைகள் காப்பகத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு நல்ல முறையில் பராமரிப்பு கிடைத்துள்ளது சில நாட்கள் கழித்து பரமேஸ்வரி வந்து தனது மூன்று குழந்தைகளையும் தன்னிடம் அனுப்பி வையுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் உரிய ஆவணங்களை காண்பித்து குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் பரமேஸ்வரி அப்போது சென்றவர்தான் திரும்பி வரவே இல்லை என குழந்தைகள் நல குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரித்திவிராஜ் நாங்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த குழந்தை கூறிய தகவல்களை வைத்து அவர்கள் படித்த பள்ளியின் பெயரை வைத்து அவரின் பெற்றோரை கண்டு பிடித்தனர் பின்னர் அவர்களை பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அக்குழந்தையின் பெற்றோர் ஆட்டோவில் வந்து இறங்கியதும் மூன்று குழந்தைகள் உடனே துள்ளி குதித்துக் கொண்டு தனது பெற்றோரிடம் சென்றுள்ளனர். 

மூன்று குழந்தைகளும் அவர்களை பெற்றோரிடம் நல்ல முறையாக ஒப்படைக்கப்பட்டனர். நான்காவதாக தருண் என்ற குழந்தை மட்டுமே  தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நிர்வாகிகளிடம்  என்னை அழைப்பதற்கு எங்க அம்மா வரலையா? என தருண் அழுகையை அடக்கிக் கொண்டு ஏக்கமாகக் கேட்டபோது எனக்கு கண்கள் கலங்கிவிட்டன.

சீக்கிரமே உங்க அம்மா வந்து உன்னை அழைத்துச் செல்வாங்க. இல்லை என்றாலும் உன்னை அம்மாவிடம் சேர்ப்பது என் பொறுப்பு  என அவனை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில்  குழந்தைகள் பராமரிப்பு துறை உறுப்பினர்கள் தருணின் பெற்றோரோ அல்லது அவனைப் பற்றி விவரம் அறிந்தவர்களோ யாராக இருந்தாலும் உடனே எங்களிடம் வந்து அவனை மீட்டுச் செல்லுங்கள்.

அவன் உங்களுக்காக ஏங்கித் தவிக்கிறான் எனத் தெரிவித்துள்ளார். அக்குழந்தையை அவர்களது பெற்றோரிடம் சேர்த்தால் தான் எங்களுக்கு மகிழ்ச்சி எனவும் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அல்லது இந்த குழந்தையை கடத்தி வந்த பரமேஸ்வரி வந்து பெற்றோர்களின் தகவலை கூறினால்தான் தருண் குழந்தையை அவருடைய பெற்றோர்களிடம் முறையாக ஒப்படைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.