5 வயது மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்திருப்பது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற மகளுடன் மீண்டும் மீண்டும் •••வல்லுறவு! தந்தையை கையும் களவுமாக பிடித்த தாய்! பிறகு அரங்கேறிய விபரீதம்!
17-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் தெலங்கானா காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். அதாவது,"என் கணவர் நன்கு குடித்துவிட்டு 5 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தினார்"என்று புகாரில் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட குழந்தையின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், தாய்க்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கானது மல்காஜ்கிரி நீதிமன்றம் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் "பெண்கள் வழக்கறிஞர்கள் சங்கம்" அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, "குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக எங்கள் சங்கத்தில் இருந்து எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள்.
வெளியில் இருந்து பல்வேறு வழக்கறிஞர்கள் எங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர். அப்படியே யாரேனும் ஆஜரானால், அவர்களுக்கு எதிராக காவல்துறையினரின் உதவியுடன் வழக்கு தொடர்வோம்" என்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.