குளியல் அறைக்கு தூக்கிச் சென்று 5 வயதுச் சிறுமியிடம் மிருகத்தனம்! 40 வயது கொடூரன் அரங்கேற்றிய பயங்கரம்!

ஆந்திர மாநிலத்தில் 5 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த 40 வயது நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுமி ஆனந்தபூரைச் சேர்ந்தவள். ஆட்டோ ஓட்டுநரான சிறுமியின் தந்தையும், மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் சிறுமியின் தாயும் இரவு நேரத்தில் தான் வீட்டுக்கு வருவார்கள் அதுவரை சிறுமி உள்ளிட்ட அவர்களின் 4 குழந்தைகளும் அக்கம்பக்கத்தவரின் கண்காணிப்பில் வெளியிடங்களில் விளையாடிக்  கொண்டிருப்பதுதான் வழக்கம்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டு நபரான கிரண் என்பவன் கடந்த புதன் கிழமை இரவு 7மணிக்குசிறுமியின் வீட்டுக்கு புகுந்தான். அப்போது வீட்டுக்குள் சிறுமிமட்டும் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட அவன் குளியல் அறைக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

வீடு திரும்பிய பெற்றோர் மகள் வலியால் அழுதுகொண்டிருப்பதைப்பார்த்து விசாரித்த போது அவளுக்கு நடந்ததை விளக்கத் தெரியவில்லை, இதையடுத்து அந்தச் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் நடந்ததை உறுதிப்படுத்தினர். இதையடுத்து சிறுமியிடம் விசாரித்த போது வந்தது கிரண் தான் என சிறுமியால் அடையாளம் காட்ட முடிந்தது.

இதையடுத்து பெற்றோர் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் கிரண் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.