ஸ்கூல் பிரேயர் மீட்டிங்கில் 1ம் வகுப்பு மாணவிக்கு திடீர் நெஞ்சு வலி..! மயங்கி விழுந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

பள்ளிக்கூடத்து பிரேயரின் போது 1-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜம்ஷெட்பூரில் பிரபலமான தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வைஷ்ணவி என்ற 5 வயது சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் பிரேயர் வகுப்பில் கலந்து கொண்ட வைஷ்ணவி திடீரென்று மயங்கி விழுந்தார்.

ஆசிரியர்கள் திடீரென்று பதறியடித்து கொண்டு அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் வைஷ்ணவியை பிழைக்க வைக்க இயலவில்லை. இறுதியில் வைஷ்ணவி மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்த செய்தியை கேட்டவுடன் வைஷ்ணவியின் பெற்றோர் கதறி அழ தொடங்கினர். வைஷ்ணவி இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது ஜாம்ஷெட்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.