6 பேர் கொடூர மரணம்! குல தெய்வத்தை காண காரில் அசுர வேகத்தில் சென்றதால் விபரீதம்!

கரூர் மகாதானபுரம் அருகே கார் - மினிலாரி நேருக்கு நேராக மோதியதில் ஒரே குடும்பத்தைன்சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..


கரூர் , கீழ மாயனூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி தனது மனைவி, மகன், பேர குழந்தைகள் உள்ளிட்ட 8 பேரும் திருச்சியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல புறப்பட்டதாக கூறப்படுகிறது.

கார் மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது எதிரில் வேகமாக வந்த மினி லாரி மோதிய பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 மாத குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர், மேலும் படுகாயமடைந்த 3 நபர்கள் கரூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மாயனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். குல தெய்வம் கோவிலுக்கு சென்றவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.