கோவை கல்லூரி மாணவிகளை வரவழைத்து ஓயோ லாட்ஜில் விபச்சாரம்! ஊரடங்கிலும் செம்மையாக கல்லா கட்டிய 22 வயது பெண்!

ஓயோ அறைகளின் பெயரில் பொய்யாக அறைகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய தொழில் பார்ட்னர் உடன் இணைந்து கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் "ஓயோ ஃபிளாக்ஷிப் ட்ரைஸ்டார் இன்" (Oyo flagship TriStar Inn") என்ற பெயரில் அறைகளை வாடகைக்கு விட்டு வந்துள்ளனர். 

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் லாட்ஜுகள் இயக்க படுவதற்கு அரசுகள் இதுவரை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. இதற்கிடையே சின்ன மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் ஒயோ லாட்ஜ் எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் லாட்ஜ்க்குளா நுழைந்த மர்ம நபர்கள் அறையில் உல்லாசமாக இருந்த ஜோடிகளை, அறை நிர்வாகிகளையும் தாக்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் லாட்ஜுக்கு வந்து விசாரணை நடத்தியபோது பாலியல் தொழில் அரங்கேறி வந்தது தெரியவந்துள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காக திருப்பூரை சேர்ந்த சிவகுமார் என்ற 25 வயது இளைஞர், நீலிக்கோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், குனியமுத்தூரில் சேர்ந்த சதாம் உசேன், போத்தனூரை சேர்ந்த ஃபியாஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்கு சம்பந்தமான சுதா என்ற பெண் தலைமறைவானதால் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது ஃபியாஸ் மற்றும் சதாம் உசேன் கல்லூரி மாணவிகள் ஃபேஸ்புக் தோழிகள் ஆகியோருடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களை அழைத்து வந்து அறைகளுக்குள் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

ஊரடங்கு காலத்திலும் இந்த லாட்ஜ் இயங்கி வருவதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் லாட்ஜுக்குள் நுழைந்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை முழுவதுமாக சேதப்படுத்தினர். பின்னர் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரையும் திருடி சென்றுள்ளனர் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.