பிறக்கும் போது வெறும் அரை கிலோ! உயிருக்கு போராட்டம்! 5 மாத தொடர் சிகிச்சை! புஷ்டியாக்கி உயிர் கொடுத்த நாகை அரசு டாக்டர்கள்! நெகிழ வைக்கும் சம்பவம்!

நாகை மாவட்டத்தில் 580 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைக்கு 5 மாதங்கள் சிகிச்சை கொடுத்து சரசாரி எடைக்கு மருத்துவர்கள் கொண்டுவந்துள்ளனர். தற்போது அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது.


நாகை சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி-லதா தம்பதிக்கு மே மாதம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை வெறும் 580 கிராம் எடை மட்டுமே இருந்தது. இதனால தம்பி வேதனை அடைந்தனர். பொதுவாக எடை குறைவாக குழந்தைகள் பிறந்தால் அவற்றை காப்பாற்றுவது சற்று கடினம்தான்.

அந்த குழந்தைக்கு போதுமான எடை கூடவும், நன்றாக சுவாசிக்கவும், இன்குபேட்டரில் குழந்தை வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அது போலவே செல்வமணி-லதா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தையும் நாகை அரசு மருத்துவமனையில் இன்குபேட்டர், செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தது. .

5 மாத போராட்டத்துக்கு பின் அக்குழந்தை 2 கிலோ எடையை எட்டியது. அத்துடன் நன்கு சுவாசிக்கவும் செய்தது. தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

5 மாதம் போராடி குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், வீரப் பெண்மணியின் அடையாளமாக அந்த குழந்தைக்கு ஜான்சிராணி என பெயர் சூட்டி பெற்றோர் மகிழ்ந்துள்ளனர். மேலும் குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு அனைவரும் தங்களது நன்றியையும் தெரிவித்தனர்.