மர அறுவை எந்திரத்தில் இருந்து துண்டாக வெளியே வந்து விழுந்த தலை..! 5 மாத கர்ப்பிணி கல்பனாவுக்கு ஏற்பட்ட பயங்கரம்!

கோவையை சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணின் தலை எதிர்பாராதவிதமாக மர அறுவை இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதால் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தை அடுத்து சூலூரில் கலங்கள் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தர்மராஜ் வயது 35 என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கல்பனா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வெவ்வேறு இனத்தை சேர்ந்த இருவரும் மனமார காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான மர அறுவை மில்லில் வேலை செய்து வந்துள்ளனர். 

தர்மராஜ் வெளி வேலையாக வெளியூருக்கு சென்று இருக்கிறார். தர்மராஜ் கடைக்கு வராத நிலையில் அவரது மனைவி கல்பனா இன்று வழக்கம்போல் மரம் மில்லுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கல்பனாவின் தலை மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கொண்டது. சிக்கி அடுத்த நொடியே கல்பனாவின் தலை துண்டாகி அவர் துடிதுடித்து உயிரிழந்தார். 

இந்நிலையில் கல்பனாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் அனைவரும் பதறி அடித்து ஓடி வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள் கல்பனாவின் தலை வெட்டப்பட்டு உயிர் இழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து இதுகுறித்து அருகிலிருந்த சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் உடனடியாக கல்பனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணான கல்பனா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.