ஊருக்கு ஒதுக்குப்புறம்! ஆடைகள் கலைந்த நிலையில் கர்ப்பிணி சடலம்! பதற வைக்கும் சம்பவம்!

5 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் அஞ்சில்லா கிராமத்தை சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணான சரிதா கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானர். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் அவரை தேடி வந்த காவல்துறை அதிகாரிகள், அவரை அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் அரைகுறை ஆடையுடன் சடலமாக கண்டுள்ளனர்.

பின் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்த பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரை விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால் பெண் வீட்டார் புகார் கொடுக்க தயங்கிய நிலையில் விசாரணை கைவிடப்பட்டது.

மேலும் இறந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி ஓராண்டிற்குள் இப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.