மாணவர்களை குறிவைத்து தம்பதியினர் போதை மாத்திரைகளை விற்று வந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலேஜ் பசங்களுக்கு மட்டும் தான்..! கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த விபரீத தொழில்..! குவிந்த கல்லூரி மாணவர்கள்! பிறகு நேர்ந்த திடுக் சம்பவம்!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே போதை பொருள் அதிக அளவில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து காவல்துறையினர் மஃப்ட்டியில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சுகுமார் என்பவரது வீட்டில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. காவல்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது போதை மாத்திரைகள் எடுக்கப்பட்டது உறுதியானது.
அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியபோது பவுன்ராஜ், இளங்கோ மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் ஆகியோருக்கும் இதில் சம்பந்தம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூரில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாகவும், 10 மாத்திரைகள் கொண்ட அட்டையை 300 ரூபாய்க்கு வாங்கி, 300 ரூபாய்க்கு ஒரு மாத்திரை என்று விற்று வந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனை இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் விற்று வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும், மாணவர்கள் இதனை தண்ணீரில் கலக்கி ருசியாக குத்திக்கொள்வது கூறப்படுகிறது. அதன்படி அவர்களுக்கு 2 நாள் வரை போதை தாங்குவதாக தெரிகிறது. 120 போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர், 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது ஆதம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.