ஆற்றில் குழந்தைகளுடன் குளித்துக் கொண்டிருந்த 4 குழந்தைகளின் தாய்..! ஆடைகளை களைந்து அருகே சென்று இளைஞன் செய்த அருவெறுப்பு செயல்! குளித்தலை விபரீதம்!

ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளம்பெண் மற்றும் குழந்தைகளுடன் மதுபோதையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவமானது குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸ் தாக்குதலினால் கடந்த 43 நாட்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 43 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. உடனடியாக குடிமகன்கள் கூட்டம் மதுக்கடைகளில் அலைமோத தொடங்கியது.

நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் 150 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. குளித்தலை பகுதியில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு ஆற்றில் குளித்து கொண்டிருந்த பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குளித்தலை பெரியபாளையத்தில் கடைக்கு மலையப்ப நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சுதா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் நேற்று தன்னுடைய குழந்தைகளுடன் சுதா ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது பெரியப்பாலத்திற்கு அருகில் இருந்த மதுக்கடையில் மது அருந்திய 5 இளைஞர்கள் அவ்வழியாக சென்றுள்ளனர். உடனடியாக சுதா குளித்து கொண்டிருந்ததை கண்டு ஆற்றில் குதித்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சுதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சுதாவிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சுதா அப்பகுதியிலிருந்த மதுக்கடையில் கூச்சலிட தொடங்கினார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

உடனடியாக சுதா அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் மாலை நேரத்தில் வருமாறு கூறியுள்ளனர். மதுக்கடையில் 2 சுதாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.