ஓசி சோறு தரணும்..! இல்லனா லைசென்ஸ் கேன்சல்! நகராட்சி ஊழியர்களின் நூதன பிச்சை..! வைரல் வீடியோ!

இலவசமாக சாப்பிட வேண்டும் என்று 5 நகராட்சி ஊழியர்கள் ஒரு உணவக உரிமையாளரை மிரட்டி உள்ள சம்பவமானது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதர் கோவிலுக்கு அருகே ஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் இந்த உணவகத்திற்கு ஆபீஸர் போன்று உடை அணிந்த நபரொருவர் தன்னுடன் 4 பேரை அழைத்து சென்றுள்ளார்.

5 பேரும் நன்றாக சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். அதன்பின்னர் அந்த ஆபீஸர் கடை உரிமையாளரிடம், "இந்த நகராட்சியில் ஆய்வாளர் நான் சாப்பிட்டதற்கு காசு கொடுக்க வேண்டுமா" என்று கேட்டுள்ளார்.

கடை உரிமையாளரோ "யாராக இருந்தாலும் சாப்பிடுவதற்கு காசு கொடுத்தாக வேண்டும்" என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார். உடனடியாக அந்த ஆபீஸர் "உணவகத்தில் சுகாதாரமில்லை, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறீர்கள்.. இது போன்ற குற்றங்களுக்காக ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்பட்டு விடும்" என்று உரிமையாளரை எச்சரித்துள்ளார்.

ஆனால் ஹோட்டல் உரிமையாளரை எதற்கும் அஞ்சாமல் " உரிமத்தை புதுப்பித்து அதற்கு என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட 5,000 ரூபாயை முதலில் திருப்பி கொடுங்கள்" என்று பதிலடி கொடுக்க அந்த ஆபீசர் பயந்து போனார்.

உடனடியாக தான் தற்போது ஆய்வாளராக இல்லை என்றும், 4 வருடங்களுக்கு முன்னர் ஆய்வாளராக இருந்ததாகவும் உண்மையை கூறியுள்ளார். உரிமையாளர் கடும் சினத்தில் இருந்ததால் வேறுவழியின்றி சாப்பிட்டதற்கு பணம் கொடுத்து அங்கிருந்து வெளியேறினர். 

மேலும் தங்களிடம் பணம் வாங்கியதற்கு, நகராட்சி ஊழியர்கள் சார்பில் நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என்று அந்த கும்பல் எச்சரித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.