5 பேரும் ரொம்ப மோசம்! குவியும் கம்பிளைண்ட்ஸ் ! என்னதான் நடக்குது பிக் பாஸ் வீட்ல?

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள், போட்டி பொறாமை என துவங்கினாலும் கூட கால போக்கில் காதல், அன்பு, அடிதடி, ஆக்ரோஷமான சண்டைகள் என இந்த வீடு பார்க்காத எக்ஸ்டிரீம் லெவல் எதுவும் இல்லை.


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக சமீப காலமாக டிரெண்டாகி வருவது இந்த 5 பேர் கொண்ட அணி தான், தனியாக பாடல் வரிகள் அமைப்பது, பாடி வீட்டை அதிர வைப்பது என அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போகிறது.

ஒருப்பக்கம் போட்டிக்காக டாஸ்க்குகள் செய்தாலும் கூட மற்றொரு பக்கம்.அவர்கள் மற்ற ஹவுஸ் மேட்ஸூக்கு எண்டர் டிரெய்னாக இருப்பது பல சமயங்களில் விபரீத்கமானலும்,அதிகமாக ரசிக்க கூடியதா உள்ளது.

ஆமா , யார் இந்த ஐவர் அணி ? சாண்டி, தர்ஷன், கவின் ,முகைன் மற்றும் லாஸ்லியா என ஐவரும் வீட்டிற்க்குள்ளாக விளையாடி வருவதும் சரி, டாஸ்க்கில் மற்றவர்களுடன் இணைந்து அடிக்கும் லூட்டியானாலும் சரி,

காண்பவர்களை ரசிக்கும் படியாகவும், ஹவுஸ் மேட்சை பொறாமை கொள்ளும் விதமாகவும் அசத்தி வருகிறார்கள், இந்த நிலையில் டிரெண்டாகி வரும் இவர்களது சேட்டை அனைவரும் ரசிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அதிலும் அவர்கள் செய்யும் சேட்டைகளுக்காகவே தனியாக ரசிகர் பட்டாளம் இருப்பதும் அவர்களுக்கான மற்றும் அவர்கள் கள்ளம் கபடற்ற நட்பிற்க்கான வெற்றி தான் என்றாலும், போட்டி நிலைபாடில் இது வரை நீடித்தாலும், இனியும் நீடிக்க அவர்களது நிலைப்பாடு முக்கியம் அதனை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் மாறுபடலாம்