அதிமுக MLAக்கள் 5 பேர் ராஜினாமா! ஆட்சியை காப்பாற்ற தியாகியாகின்றனர்! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்க 5 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைக்க முயற்சி நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


 சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாகவே வரும் என்று அழகிரி தெரிவித்தார். இதனை அறிந்து தான் 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய எடப்பாடி திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அழகிரி தெரிவித்தார்.

மேலும் ஐந்து எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் மொத்த பலத்தை குறைக்கும் முயற்சியிலும் அதிமுக உள்ளதாக அவர் கூறினார். இதற்காக 5 எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் அழகிரி தெரிவித்தார்.