முரசொலி மூல பத்திரம் எங்கே? ஸ்டாலின் காரை மறித்த மதுரை பாஜகவினர்! அதிர்ந்த திமுகவினர்!

திமுக தலைவர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்த காரை அநாகரீகமாக பாஜகவினர் முற்றுகையிட்டு உள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று மூன்றுமாவடி பகுதியில் சமத்துவ கிறிஸ்துமஸ் தினவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சில பாஜகவினர் கையில் தங்களுடைய கட்சி கொடியை பிடித்துக்கொண்டு "மூலப்பத்திரம் எங்கே" என்ற வாசகத்துடன் ஸ்டாலினின் காரை மறித்தனர். உடனடியாக அவருடைய காரிலிருந்து வெளியே வந்த பாதுகாப்பு படை வீரர்கள் மறியல் செய்த வீரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சம்பவம் அறிந்த திமுகவினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்‌. திமுகவினர் வருவதை அறிந்த மறியல் செய்த பாஜகவினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

எதிர்க்கட்சித் தலைவர் செல்லும் நேரத்தில் திடீரென்று 5 பேர் மறியல் செய்யும் அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது திமுகவினர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.