யாருக்கும் டெஸ்ட் எடுக்காதீங்க..! எல்லாருக்கும் நெகடிவ்னு போட்டுக்கோங்க..! கொரோனாவுடன் விளையாடிய தூத்துக்குடி டீன்!

கொரோனா வைரஸ் பரிசோதனையை எடுக்காமலேயே முடிவுகளை தெரிவிக்குமாறு அறிவித்த மருத்துவ டீன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி டீனாக திருவாசகமணி என்பவர் பணியாற்றி வந்தார்.  இவர் சில நாட்களுக்கு முன்னர் பயிற்சி மருத்துவர்களின் விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற போவதாக தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2014-ஆம் ஆண்டு பயிற்சி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

2014 ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தேர்ச்சி சான்றிதழ் இல்லாமல் திருவாசகமணி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் மாணவர்கள் இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் தாங்களாகவே விடுதியை காலி செய்யாவிட்டால் காவல்துறையினரை அழைத்து வந்து காலி செய்ய வைப்பேன் என்றும் அடாவடித்தனமாக கூறினார். 

இவை அனைத்தையும் பதிவு செய்து பயிற்சி மருத்துவர்கள் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சிலருக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலேயே நெகட்டிவ் என்று சோதனை முடிவை போட்டுக் கொள்ளுங்கள் என்றும் இவர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

இத்தகைய சம்பவங்களுக்கு பிறகு விருதுநகர் மருத்துவ கல்லூரியிலிருந்து டீன் திருவாசகமணி மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு டீனாக மாற்றப்பட்டுள்ளார். 

கொரோனா நோய் தாக்குதல் தொடங்கியதிலிருந்து ஏற்கனவே  சென்னை ஸ்டாண்லி, கோவை திருச்சி ஆகிய மருத்துவமனை டீன்கள் மாற்றப்பட்ட நிலையில்  தற்போது விருதுநகர் மருத்துவ கல்லூரி டீன் மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது தமிழ்நாட்டு மருத்துவத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.