போக்குவரத்து போலீஸ்க்கு லஞ்சம் மட்டும் 48,000 கோடியா? அம்மாடியோவ்

லஞ்சம் என்பது இப்போது போலீஸ்காரர்களுக்கு உரிமை போன்று மாறிவிட்டது.


அந்த வகையில், போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாயை லஞ்சமாக அளிக்கிறார்கள் என்று வெளியாகி இருக்கும் செய்தி அதிர வைக்கிறது. 

போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் கொடுக்கும் பணம் 48 ஆயிரம் கோடி என்பது சேவ் லைஃப் என்ற அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த சேவ்லைஃப் அறக்கட்டளை நாடு முழுவதும் 1,200 லாரி ஓட்டுநர்கள் மற்றும் 110 லாரி உரிமையாளர்களிடம் நடத்திய ஆய்வில், 82% பேர் சாலைப் பயணத்தின் போது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

லாரிகாரர்கள் மட்டும் கொடுக்கும் லஞ்சமே இந்த தொகை என்றால், ரோடுகளில் நின்று வாங்கும் லஞ்சம், பஞ்சாயத்துக்களில் கிடைக்கும் லஞ்சம் என்று, இவர்களது லஞ்சப் பணத்தை வைத்து ஒரு பட்ஜெட்டே போட்டுவிடலாம் போலிருக்கிறதே.