20 வயது மகளின் மண்டையில் சுத்தியலால் அடித்து சிதைத்து கொடூரமாக கொலை செய்த 48 வயது தந்தை..! பதற வைக்கும் வாக்குமூலம்!

பெற்ற தந்தையே மகளை கொலை செய்துள்ள சம்பவமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் விஹார் என்ற நகரம் அமைந்துள்ளது. தத்தாராம் சமாராம் ஜோஷி என்ற 48 வயது நபர் மும்பை மாநகர் தாதரில் இயங்கி வந்த பிரபல நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகளுள்ளார்.

இவருடைய மகளின் பெயர் அகன்ஷா. அகன்ஷாவின் வயது 22. இவர் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் மும்பையிலுள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் ஜோஷி அகன்ஷாவை சுத்தியலால் பலமாக தாக்கியுள்ளார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஜோஷியின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர். அப்போது அகன்ஷா ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தார். அதுமட்டுமின்றி ரத்தக்கறை படிந்த சுத்தியலும் அவருக்கு அருகே இருந்துள்ளது. உடனடியாக காவல்துறையினர் ஜோசியரே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. "நான் என்னுடைய மகளை கொலை செய்துவிட்டேன்" என்று மட்டுமே கூறுகிறார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இன்னும் காவல்துறையினர் கொலைக்கான‌ காரணம் குறித்து   தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

இந்த கொலை சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.