உல்லாசத்துக்கு வர மறுப்பு! கள்ளக் காதலி முகத்தில் ஆசிட் வீசிய இளைஞன்! அதிர வைக்கும் சம்பவம்!

45 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் அவர் மேல் ஆசிட் ஊற்றிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


உத்தரப்பிரதேச மாநிலம், கச்சியானா கெரா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் குறிப்பிட்ட பெண், கடந்த 5 ஆண்டுகளாக, இளைஞர் ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்துள்ளார். கணவனுக்கு தெரியாமல் அந்த பெண் இளைஞனுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் கள்ளக் காதல் பெண்ணின் கணவனுக்கு தெரிந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணை கணவன் கண்டித்துள்ளான். இதனால் வீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த உறவை சமீபத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்று பெண் இளைஞனிடம் கூறியுள்ளார்.

இதில், அந்த இளைஞர் கடும் ஆத்திரமடைந்துவிட்டார். மேலும் தனிமையில் இருக்கலாம் என கடைசி ஒரு முறை என்று பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்துள்ளார்.

இதனால் தனது கள்ளக்காதலி வீட்டுக்கே சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்த அந்த நபர், அவர் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு, தப்பியோடிவிட்டார். இதில் கடுமையாக காயம் அடைந்த அப்பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.