45 வயதில் பிரபல நடிகை கொடுத்த படு கவர்ச்சி போஸ்! ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு!

தன்னுடைய 45-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றன.


பாலிவுட்டை கலக்கி வந்த கவர்ச்சி கன்னிகளுள் கரிஷ்மா கபூரும் ஒருவர். இவர் நடித்த பல திரைப்படங்களான "ராஜா இந்துஸ்தானி", "ஹீரோ நம்பர்-1", "இஷ்க்" ஆகியன பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ளன. செவ்வாய்க்கிழமை அன்று இவர் தன்னுடைய 45-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தன்னுடைய குழந்தைகளான சமீரா மற்றும் கியானுடன் லண்டனில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது நீச்சல் குளத்தின் அருகே "மோனோகினி" என்ற உடையில் அவர் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கருப்பு நிற உடையை அணிந்திருந்தார்.

புகைப்படத்தை ஒரு மணி நேரத்திற்குள், ஒன்றரை லட்சம் ரசிகர்கள் பார்த்து பாராட்டியுள்ளனர். இன்னும் இளமையாகவே இருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர். கரிஷ்மா கபூர் வலைதளங்களில் தன்னைப் பற்றிய செய்திகளை அப்டேட் செய்து வருவதை வழக்கமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் மற்றொரு ஜோடியான கரீனா கபூர் மற்றும் சைப் அலி கான் தங்கள் குழந்தையான தைமூர் உடன் லண்டனில் தங்கியுள்ளனர். கரிஷ்மாவின் பிறந்த நாளன்று நேரடியாக சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கரிஷ்மா கபூரின் பிறந்தநாளில் முன்னணி பாலிவுட் நடிகை மற்றும் நடிகர்கள் வலைதளங்களின் மூலமாக அவருக்கு வாழ்த்து செய்தியை பரிமாறியுள்ளனர்.