44 வயதில் பாட்டியான கமல் பட நாயகி! மகளின் குழந்தையுடன் ஹாஸ்பிடல் இருந்து வீடு திரும்பினார்!

பிரபல பாலிவுட் நடிகையான ரவீனா டாண்டன் பாட்டி ஆகியுள்ள பாலிவுட்டில் அனைவரையும் மகிழ செய்துள்ளது.


பிரபல பாலிவுட் நடிகைகளில் ரவீனா டாண்டனும் ஒருவர். இவருடைய வயது 44 இவருடைய கணவரின் பெயர் ஷான் மெண்டஸ். இருவரும் இணைந்து ஒரு பெண்ணை தத்தெடுத்தனர். அந்த  பெண்ணுக்கு சென்ற ஆண்டு திருமணம் நடத்தி வைத்தனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்து சென்றனர். இவர் பூஜா மற்றும் சின்னியா என்ற 2 பெண்களை தன்னுடைய 21 வயதில் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

44 ஆண்டுகளிலேயே இவர் பாட்டியாகியுள்ள செய்தியானது பாலிவுட்டில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சின்ன குழந்தையை வரவேற்பதற்காக குடும்பத்தின் சார்பில் பல்வேறு விதமான பூஜைகள் நடத்தப்பட்டன. அந்த பூஜையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரவீணா சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிபுணரான பூஜா என்பவர் இன்ஸ்டாகிராமில், "பலரும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பாசத்தை பகிர வேண்டும் என்று கூறுவர். ஆனால் நீங்கள் மட்டுமே அதனை உங்களுடைய நிஜ வாழ்க்கையில் அமல்படுத்தியுள்ளீர்கள்" என்று ரவீனாவை புகழ்ந்து பதிவு செய்திருந்தார்‌.

குழந்தையின் புகைப்படங்கள் ஆனவை சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.